சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்….”

1 1 6 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்....”

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளில் போர் நடைபெற்ற கடந்த 30 ஆண்டு காலப்பகுதி மற்றும் இறுதி போர் என்று அழைக்கப்படுகின்ற 2009ம் ஆண்டு வரையில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, அல்லது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள்,ஒப்படைக்கப்பட்டவர்கள் என பெருமளவானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள், ஆகஸ்ட் 30-ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது. இது தொடர்பில் இலக்கு ஊடகம் நடத்திய செவ்வியில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாளில் சர்வதேசத்திடம் நீதி கோரப்பட்டுள்ளது.

unnamed 3 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்....”

மூத்த சட்டத்தரணி எஸ்.இரத்தினவேல்  

கேள்வி:

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர் பான தீர்வை காண்பதில் இலங்கையும் மேற் குலகம் சார்ந்த ஐ.நாவும்இழுத்தடிப்புக்கள் மேற் கொண்டு வருகையில் தமிழ் மக்கள் எந்த நகர்வை மேற்கொள்வது பொருத்தமானது?

பதில்:

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு பாரதூரமான குற்றமாகும். அந்தக்குற்றத்தைஇழைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்கள் இலக்கு வைத்து அதை செய்திருக்கிறார்கள் என்றுநிரூபிக் கப்பட்டால் அது ஒரு இனச்சுத்திகரிப்பு (genocide) என்ற குற்றத்துக்குள் அடங்கும். எனவே இந்த காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் என்ற அந்த விடயம், மிக ஒரு பொருள் செறிந்து. அதை சரியானமுறையில் நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக விவாதங்கள் போராட் டங்கள் நடந்து கொண்டுஇருக்கின்றன. அவர்களைப்பற்றிய வழக்குகள் உள்ளூரில் நடந்து கொண்டு இருக்கின்றன.  இலங்கைக்குவெளி யேயும் அது தொடர்பான தகவல்கள் மற்றும் போரின் போது நடைபெற்ற சித்திரவதைகள், இரசாயனக்குண்டுத்தாக்குதல்கள், கொலைகள், கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியமை, நிலக் கண்ணிவெடிகள் வைப்பு இவைஅனைத்தும் போர்க் குற்றங்கள் என்பவற்றில் அடங்கும். எனவே பாரிய குற்றங்களை செய்த இலங்கை அரசாங்கம்தொடர்பில், உள்ளூரிலும், வெளி நாடுகளிலும் நடவடிக்கை எடுக்க  அது  சம்பந்தமான சாட்சியங்கள், ஆதாரங்கள்என்பவை பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது உத்தியோகப்பூர்வமாக ஐ.நாவினால் அமைக்கப்பட்ட ஒரு குழுமம் அதை செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ் சமூதாயத்தைப்பற்றி ஒரு குற்றச்சாட்டு இருந்தது அதாவது, போதுமான சாட்சியங்களை கொண்டுவரவில்லை என்று. அது உண்மைதான் ஏனென்றால் ஒரு காலத்தில்  காணாமல்   ஆக்கப்பட்டவர்கள், கைது நடவடிக்

கைகள் இருந்தாலும் இது பற்றி சரியாக ஐக்கிய நாடுகளால் ஸ்தாபிக்கப்பட்ட நிலையங் களுக்கு அதுசென்று சேரவில்லை. ஆனால் தற்போது உள்ளூர் ஸ்தாபனங்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து ஓரளவு சரியான தகவல்கள், ஆதாரங்கள் அவர்களால் எடுக்கப் பட்டுள்ளது. அதோடு மக்களும் தாமா கவே பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குச் சென்று தம் மிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையிலும் எதற்காக எமக்கான தீர்வு நீடித்துக்கொண்டு செல்கின்றது என்பது குறித்து பார்த்தால், Geopolitics என்ற புவிசார் விடயங்கள்,தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் மேல் தாக்கம் செலுத்திக்  கொண்டுள்ளது. அதா வது மேற்கத்தைய நாடுகள், இந்தியா, சீனா உள்ளிட்ட அயல் நாடுகள் அனைத்தும் நேரடியாக அக்கறை கொண்டுள்ளன.  இப்போது பார்த்தால் உண்மையில் விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கர வாத இயக்கம் என்று தடை கொண்டு வந்தது, போரில் அவர்களை தோற்கடிப்பதற்கு வழிகளை ஏற்படுத்தியது போன்ற பல பாரதூரமான விடயங்களை மேற்கத்தியநாடுகள் செய்து வந்தன. ஒரு  போர்க்குற்றத்தை இலங்கை அரசாங்கம் செய்திருக்கென்று நிரூபிக்கப்பட்டாலும் கூட, நான் முன்னதாக குறிப்பிட்ட புவிசார் அரசியல் இதில் அதிகம் தாக்கம் செலுத்தும்.  கடந்த 2010ம் ஆண்டு முதல்ஜெனிவாவில் இருந்து ஒவ்வொரு தீர்மானமும் வந்துகொண்டிருக்கின்றது.  அந்த தீர்மானத்தின் முதல் வரைவு நன்றாகஇருந்தது. ஆனால் அந்த தீர்மானத்தின் இறுதி வரைபில் உள்ளவிடயங்கள் நீர்த்துப்போகும் படியாகத்தான் தற்போதுஅந்த தீர்மானம் வருகின்றது. அதற்கு காரணம் இந்த புவிசார் அரசியலின் தாக்கம் தான். இதனால் தமிழ் மக்களுடையபிரச்சனைகள் ஒரு சரியான முறையில் கையாளப்படவில்லை. தற்செயலாக ஒரு காரசாரமான ஒரு விடயத்தை கொண்டு வந்தால் கூட, அதற்கான பேரம் பேசும் நிகழ்வுகள் திரைக்குப்பின்னால் நடக்கும். இது இலங்கை அரசுக்குஒரு வாய்ப்பு. தங்களுடைய நாடு எக்கேடுகெட்டாலும்  பரவாயில்லை. ஆனால் இந்த போர்க்குற்றங்களில் இருந்துஅரசாங்கத்தையும், தமது இராணுவத்தையும் பாதுகாப்பதற்கு அவர்கள் எந்த விதமான விட்டுக்கொடுப்பையும்செய்யத்தயாராக உள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ் நிலையில்தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் கையாளப் பட்டுக்கொண்டு வருகின்றது. இதைநாம் முன் னதாக பார்த்தோமேயானால், 1983ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த போது இந்தியா அதில் கூடுதலானகவனம் செலுத்தியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மிகக்கடுமையாக இலங்கை அரசாங்கத்தைக்கையாண்டார், ஆனால் அதன்பின்பு வந்த இந்திய அரசாங்கமும் தலைவர்களும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்தபடி யால், தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் இன்ன மும் தீர்க்கப்படாமல் நீடித்த நெருப்பாகவே இருக்கின்றது. எனவே அரசியல் நிலைமைகள், அரசியல் தலைமைகள் மாறும் போது இதுவும் மாறும். ஆகவே தமிழ்மக்களுடையபிரச்சனைகளில்  சரி யான ஒரு நகர்வை முன்னெடுத்துக்கொண்டு இருந்தால்தான் காலம் கனிந்து வரும்போது தமிழ்மக்களுடைய பிரச்சனைகளுக்கு   நியாயமான ஓர் தீர்ப்பு வரும். இந்த  நம்பிக்கையில்தான் தமிழ்மக்கள்அரசியல்,ராஜதந்திர விடயங்களில் ஓர் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும்.

அந்த இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும் போது எங்களுடைய இந்த நகர்வு கள் நிச்சயம் ஒருபலனைத்தரும் என்றுதான் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம்’ என்றார்.

unnamed 1 1 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்....”

முல்லைத்தீவு  மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி 

கேள்வி:

 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவு நாளில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்:

‘எங்களுடைய உறவுகளை இராணுவத்தி டம் ஒப்படைத்து  தற்போது சாட்சியங்களாக இருக்கின்ற எம்முடையகோரிக்கை என்னவென் றால் உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்பதுதான்.

ஆனால் எம்மீது உள் நாட்டு பொறி முறைக்குள்தான் நீங்கள் தீர்வைக்காணவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. நாம் அதை ஏற்கப்போவதில்லை. OMP அலுவலகம் தகவல்களை எடுத்துக்கொண்டு இருக்கின்றது. அவர்கள் கிராமசேவையாளர்கள் மூலம் விடும் அச்சுறுத்தல் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் வேறு வழியின்றி அவர்கள் அலுவலகத்தில் பதிவு களை செய்கின்றனர். இந்த செயற்பாடு எங்களுக்கு பெரும் இழப்பு. மேலும் பல நிறுவனங்கள் உள் நாட்டில்தான் நீதி கிடைக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். ஆனால் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் சர்வ தேசத்தையே நம்பியுள்ளோம் அவர்களே எமக் கானநீதியைப் பெற்றுத்தர வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து தூதரகங்கள் மற்றும் ஐ.நாவிலும் எமது கோரிக்கையை முன் வைத்துள்ளோம். எனவேஎமக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக் கின்றது’ என்றார்.

unnamed 2 1 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்....”

முன்னாள்  மாகாணசபை உறுப்பினர்  துரைராஜா ரவிகரன்

கேள்வி:

கொக்குளாய் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுகள் கானாமல் ஆக்கப்பட்டவர்களுடை யாதா?

பதில்:

‘கடந்த 1984ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில்   இருந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளுடனான தாக்குதலைக் காரணமாகக் கூறி இராணுவம் வெளியேற்றியது. அதன் பின் 2011ம் ஆண்டில்தான்மீண்டும் மக்கள் அப்பகுதியில்  குடியேற்றப்பட்டனர். அது வரையில் குறித்த பகுதியில் இராணுவம் தான் நிலை கொண்டிருந்தது.

இதன் காரணமாக கொக்குளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட ஆறு கிராம அலுவலர்பிரிவுகளிலும் மக்கள் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. எனவே 27 ஆண்டு களாக குறித்த பகுதிகள்இராணுவத்தினரின் முழுக் கட்டுபாட்டில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.இந்த நிலையில்தான் 2009ம் ஆண்டு இனவழிப்பு போரின் இறுதியில் மக்கள் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். அப்போது இராணு வத்தினரிடம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர். அவ்வாறுசரணடந்தபோராளிகள், குடும்பத்தினரால், இராணுவத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்களிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் என அனைவரையும் இராணுவம் தமது பாவனையில் வைத்திருந்த பேருந்துகளில் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பின் தமது குடும்பத்தினரிடம் வரவில்லை.

அத்தோடு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த தமது உறவினர்கள், அதேபோல் மக்களை தடுத்து வைத்திருந்த முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்ட தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என உறவுகளை இழந்த குடும்பத்தினர் கூறுகின்றனர். அதே நேரம் போர் நடந்துகொண்டிருந்த போது கடல் வழியாக வெளியேறிய போது இராணுவத்தினரி னால் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒவ்வொரு முறை போராட்டங்களை நடத்துகின்ற போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுவதை காணமுடிகின்றது.

இந்த சூழலில்தான் கொக்குதொடுவாய் புதைகுழியும் கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தான் கொன்று இராணுவம் புதைத்திருக்கும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்கள் தற்போது சந்தேகம் அடைந்துள்ளனர். ஏனெனில் 2009ம் ஆண்டு சரணடைந்த தமது உறவினர்களைபேருந்துகளில் ஏற்றி  கொக்குத்தொடுவாய் பக்கம்தான் கொண்டுசென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மக்களிடம்உள்ளது. மேலும் கைகள்  கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உயிருடன்புதைக் கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது. அத்தோடு புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளஇடத்திற்கு அருகில் வீடு கட்டுவதற்கு முற்பட்டபோதும் கூட சில மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்களோடு கொக்குத்தொடு வாய் புதைகுழி தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குநடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இந்த புதை குழி அருகில் பொது மக்களை செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊடகவிய லாளர்களைக்கூட அகழ்வுநடைபெறும் போது அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இது முதல் கட்ட ஆய்வென்றும் 2ம் கட்டமாக பகுப்பாய்வு செய்யப்போவதாகவும், அதில் தான் உண்மைகள் வெளிப்படும் என்றும் இராணுவத்தரப்பு  தகவல்க ளைவெளியிட்டுள்ளன. மேலும் தொல்லியல் துறையினர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்களின் தகவலில்,இங்கு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளிட்டப் பொருட்கள் 2ம் கட்டமாக யாழ் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதைகுழி தொடர்பாக ஆரம்பத்தில் நீதி மன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில்,  பலராலும் வைக்கப்பட்டகோரிக்கை, சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும். யாழ் பல்கலைக் கழகதொல்லியல் பீடதுறையினை சேர்ந்த மாணவர் களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில்இருக்க வேண்டும்.  இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு , மூன்று நாட்கள் பரமுபுஷ்பரட்ணம் ஐயா அவர்கள் வந்திருந்தார். ஆனால் அவரும்  பின்னர் வரவில்லை.

இறுதிவரையில் சர்வதேசம் சார்ந்த யாரும் இந்த புதைகுழி அகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் கொக்குத்தொடு வாய்ப்பகுதிகளில் மேலும் பல புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம்எழுந்துள்ளது.

இலங்கையில் எத்தனையோ புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும்      ஒன்றுக்கும் நீதியான, நேர்மையான வகையில்பதிலோ தீர்வோ கிடைக்க வில்லை.

இந்த நிலையில், உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை.  யுத்தம் ஆரம்பிக்கப்பட்டகாலத்திலிருந்து இன்று வரை முழு பொய்யுரைப்பவர்களாகத்தான் இலங்கை அரசு இருக்கின்றது. எங்களுக்கு தேவைசர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும்.

எத்தனை தாய்மார்  பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள். இப்படியான நிலைமையில் அவர்களுடையஏக்கம், அவர்களுடைய கண்ணீர்  இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும்’ என்றார்.

unnamed 3 1 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  நாள்: ‘இலக்குகளை தவறவிடாமல் காலம் கனிந்து வரும்  வரையில் தொடர்ந்து செயற்பட வேண்டும்....”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி 

‘2017ம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்கு இணைந்த போராட்டத்தின் மாபெரும் சக்திகளாக  செயற்பட்டு எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டு போராடி வரு கின்றோம்.

எங்களுக்கு உள்ளகப்பொறிமுறையில் எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்தில் சர்வதேச தலையீட்டை நாம் கோரிவருகின்றோம். அந்த வகையில் 2018ம் ஆண்டு ஐ.நாவில் கூட எங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள் ளோம். ஆனாலும் சர்வதேசரீதியான பார்வைகள் மிகக்குறைவாகவே இருந்த வண்ணம் உள்ளது. இருந்தும் சர்வதேசத்தின்அமைப்புகள் சில முன்வந்து சில செயற்பாடுகளை செய்வதற்கு முன்வந்தாலும் அவர்களும் எம்மை உள்ளகபொறி முறைக்குள் எம்மை சிக்கவைக்கும் வேலைத் திட்டங்களையே செய்து வருகின்றனர்.இதனால் இன்னும் காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

இக்காரணத்தினால் சாட்சியங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காலங்கள் தீர்வின்றி செல்லுமேயானால் மீதமுள்ள பெற்றோர் மற்றும் உறவுகளும் மரணித்து விடுவார்கள். எனவே சர்வ தேசம் எங்களுக்கானஒரு தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு  முயற்சி எடுக்க வேண்டும் என வோண்டுகோள் விடுக்கின்றேன்’ என்றார்.