சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்

509 Views

எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 14வது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

IMG 0083 சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்

இன்றைய தினமும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் சிலருக்கான தடையுத்தரவுகளை வாசித்து அவர்கள் போராட்டம் நடாத்தமுடியாது என தெரிவித்தனர்.

அருட்தந்தை ஜோசப்மேரி,அருட்தந்தை ஜெகதாஸ் ஆகியோருக்கு இன்று தடையுத்தரவினை வழங்க முற்பட்ட நிலையில் அவர்கள் போராட்ட இடத்தில் இல்லாத காரணத்தினால் காவல்துறையினர் தடையுத்தரவினை வாசித்துவிட்டு திரும்பிச்சென்றனர்.

நேற்யை தினம் குறித்த பகுதியில் போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு காவல்துறையினர் முற்பட்ட நிலையில் போராட்டம் நடாத்தியவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையினால் அங்கிருந்து அகன்று சென்றனர்.

IMG 0085 சர்வதேச சமூகம் நீதியைப்பெற்றுக்கொடுக்கும் வரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்

இன்றைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கபட்டோரின் உறவினர்களும்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிகள் இன்றை 14ஆம் நாள் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தம்மை நோக்கி வீசப்படும் நிலையிலும் தாங்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வோம் என இங்கு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளரும் மகளிர் அமைப்புகளின் முக்கியஸ்தருமான திருமதி ரஜனி பிரகாஸ் தெரிவித்தார்.

Leave a Reply