சம்மாந்துறையில் அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கி மீட்பு – பொலிஸ் தீவிர விசாரணை

301 Views

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள கல்லரிச்சல் பைந்தாற்றில் மண் ஏற்றிச் சென்ற லொறியில் நேற்று வெள்ளிக்கிழமை கைதுப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டடு ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சம்பவதினமான வியாழக்கிழமை அதிகாலை லொறி ஒன்றில் மண் ஏற்றப்பட்டு அதனை அந்தபகுதியிலுள்ள குடிமனைப்பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டுள்ள நிலையில் அந்த மண்ணில் பொலித்தீன் பை ஒன்றை கண்டு எடுத்தபோது அதில் கைதுப்பாக்கி ஒன்றை கண்டனர்

இதனையடுத்து குறித்த கைதுப்பாக்கியை பொலிசாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர் இந்த துப்பாக்கி பாவிக்கூடிய நிலையில் இருப்பதாகவும் இது அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி எனவும் பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply