கோத்தாவின் கொலை ஊர்தி சம்பந்தமாக தகவல் வெளியிட்ட சாரதிகள் கைது

532 Views

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இருவரை சிறிலங்கா குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற குறித்த சந்தேகநபர்கள் நேற்று (13) இரவு மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், தாங்களே குறித்த வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான சாரதிகள் என கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கோத்தாவின் உத்தரவில் பேரிலேயே இந்த கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் முதலைகளுக்கு இரையாக குளத்தில் போடப்படுவார்கள் எனவும் இவர்கள் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.

Leave a Reply