கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் என மகிந்த ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார் .
ஐக்கியதேசிய கட்சியின் வேட்பாளர் சஜித்பிரேமதாச வெற்றிபெற்றால் கோத்தபாய ராஜபக்ச ஜம்பர் அணிய வேண்டிய நிலையேற்படும் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ள கருத்திற்கே மகிந்த ராஜபக்ச பதில் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சஜித்பிரேமதாசவிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற மத்துகம பேரணியில் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற மறுநாளே பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணியவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.