கோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்

516 Views

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு கோத்தபயா ராஜபக்ஸவிற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவதோடு ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை தருமாறு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அபுதாபி அரசாங்கத்தின் முடிக்குரிய இளவரசரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறித்த அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் பொதுவான அபிலாசைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதால் இரு தரப்பினரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply