கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் மக்கள் கூடியதால் பரபரப்பு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது (31.05.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

ஐஎம்எப் மரணபொறியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் போராட்ட இயக்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.   இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.