கொழும்பு – அம்பாந்தோட்டை துறைமுகங்களில் ரஸ்யாவையும் இணைக்க முயற்சி

கொழும்பு துறைமுக நகர் அபவிருத்தி மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு போன்றவற்றில் ராஸ்யாவும் பங்குதாரராக மாற்வேண்டும் என சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சா கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ரஸ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான கோறிவிச் மெனிசென்கோ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மகிந்த இதனை தெரிவித்துள்ளார். இரகசியமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரலும் கலந்துகொண்டிருந்தார்.

ரஸ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான மெனிசென்கோ 17.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை உடையவர். நிலக்கரி, பசளை, மின்சாரம், எரிபொருள் என பல துறைகளில் வர்த்தகங்களை மேற்கொண்டுவரும் அவரின் நிறுவனங்களில் 100,000 பேர் பணிபுரிகின்றனர்.