கொழும்பில் களம் இறங்குகின்றார் சஜித்: அனுமதியளிக்க ரணில் தயார்

464 Views

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதம வேட்பாளர் என்ற ரீதியில் நாடு முழுவதும் பயணிக்க வேண்டியுள்ளதால், எந்தச் சிரமமும் இல்லாமல் வெற்றி பெறக்கூடிய ஒரு மாவட்டத்தில் போட்டியிட சஜித்துக்கு வாய்ப்பளிப்பது தவறல்ல என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந் தால், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வேட்பாளர் வெற்றிடத்துக்குத் தான் பெயரிடும் ஒருவரே போட்டியிடவேண்டும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேதமாஸ தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply