கொரோனா  2ஆம் அலையில் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் பலி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,012 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், முதல் அலையை விட இரண்டாம் அலையில் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 719 மருத்துவர்கள் கொரோனாவின் இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழுகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பிகாரில் 111 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 32 மருத்துவர்களும், புதுவை ஒரு மருத்துவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply