கொரோனா வைரஸ்: சீனாவிலுள்ள இலங்கையரை அழைத்துவர அவசர நடவடிக்கை

337 Views

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் பீஜிங்க், ஷென்ஹூ ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 40 மாணவர்களையும் மீள நாட்டுக்கு அழைத்துவருதற்கும் தேவையன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply