கொரோனா வைரஸால் மேலும் 36 பேர் மரணம் – 2,849 பேருக்கு கொரோனா தொற்று

133 Views

இலங்கையில் மேலும் 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இதனை நேற்றிரவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 2,849 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 1,83,442 ஆக எகிறியுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் என்பவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 212 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளத.

Leave a Reply