கொரோனா பயண தடையால் பட்டினியோடு போராடும் மன்னார் மக்கள்

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சில குடும்பம்பங்கள் சேற்று நீரில் மட்டி பொறுக்கி உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

IMG 20210614 120707  கொரோனா பயண தடையால் பட்டினியோடு போராடும் மன்னார் மக்கள்

மேலும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் வாழும் மக்கள் காட்டுக்குள் சென்று காட்டுப் பழங்களான பாலைப்பழம் வீரப்பழம் போன்றவற்றை சேகரித்து  அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் பெரு நிலப்பரபரப்பாக இருக்கும் பல பகுதிகளில் உள்ள சிறு குளங்களில் மீன்களை பிடித்து அதை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

IMG 0960  கொரோனா பயண தடையால் பட்டினியோடு போராடும் மன்னார் மக்கள்

பயண தடை நடுத்தர குடும்பங்களையே பாதித்துள்ள நிலையில், ஒழுங்கான தொழில் வாய்ப்பும் இல்லாமல் அத்தியாவசி பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாட தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

IMG 0958  கொரோனா பயண தடையால் பட்டினியோடு போராடும் மன்னார் மக்கள்

முன்னைய நாட்களில் மட்டிபொறுக்குதல் பாலைப்பழம் வீரப்பழம் சேகரித்தல் குளத்து மீன் பிடித்தல் போன்றவை பொழுது போக்குக்கிற்காக செய்து வந்த போதும்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இவையே முழுநேர உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கின்றது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

IMG 20210614 120548  கொரோனா பயண தடையால் பட்டினியோடு போராடும் மன்னார் மக்கள்

இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது மன்னார் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வதற்கு பட்டினியோடு போராடி வருகின்றார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply