கொரோனா தொற்று – மட்டக்களப்பில் கணவன்,மனைவி உயிரிழப்பு

239 Views

மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 16ஆம் திகதி 79வயதுடைய  ஆண் ஒருவர்  உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இன்று அவருடைய மனைவியும் உயிரிழந்துள்ளார்.

 இதேநேரம், அரசடி கிராம சேவையாளர் பிரிவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் 22 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 531 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அத்துடனன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

Leave a Reply