கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை

620 Views

உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி நிறுவமான  Serum Institute of India, Oxford  astrazeneca, ஆகியவற்றின்  தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தற்காலிக தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தற்காலிக ஏற்றுமதி தடையால், வரும் ஏப்ரல் மாத இறுதி வரை விநியோகம் பாதிக்கப்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இருக்கும் 190 நாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதுவரை இந்தியா 60 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை  76 நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதில் பெரும்பாலான  மருந்துகள் Oxford  astrazeneca மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று மட்டும் இந்தியாவில் 47,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 275 பேர் இறந்தனர். 2021-ம் ஆண்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இத்தனை அதிகமாகப் பதிவானது இதுவே முதல் முறை.

மேலும் வரும் ஏப்ரல்  மாதம் முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவிருக்கிறது. எனவே கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என  இந்திய சுகாதார அமைச்சகம் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply