கொரோனா தடுப்பு மருந்து – தமிழர் தாயகப் பகுதிகள் அரசாங்கத்தால் புறக்கணிப்பு

348 Views

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் தடுப்பு மருந்துகள் வழங்கல் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலங்கையில் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,242 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,133ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக    இலங்கையில்   கொரோனாவுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடுகள்  வேகமாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான எந்த செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற  நிலையில், இதுவரையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் எந்தவித தடுப்புபூசி வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வடக்கு கிழக்கில் சுகாதார பணியாளர்களுக்கே இதுவரையில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படாத நிலையே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில்  பாதிக்கப்படும் நபர்களையும் அவர்கள் குடும்பங்களையும் தனிமைப்படுத்துவதற்கு வடக்கு கிழக்கு பகுதிகளை முதலாவதாக தெரிவு செய்த அரசாங்கம், தடுப்பூசியை வழங்குவதற்கு பின்னடித்து வருவது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply