கொரோனா சடலங்களை எரிக்க பணம் தர முடியாது – அரசாங்கத்தின்  அறிவிப்பை நிராகரித்த முஸ்லீம்கள்

410 Views

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில், கொரோனா தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது அரசு இறந்தவர்களை தகனம் செய்ய பணடும் கேட்டுள்ளது அம்மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனாவினால் மரணிப்போரை எரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் மரணமடைந்த மூன்று முஸ்லிம்களின் குடும்பத்தவர்கள், இறந்த தமது உறவினர்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதோடு, அதற்காக சவப்பெட்டிகளை வழங்கவோ, அதற்குரிய பணத்தைச் செலுத்தவோ முடியாது என கூறியுள்ளனர்.

Leave a Reply