கொரோனா மரணம் 941 ஆக அதிகரிப்பு! நேற்றும் 20 பேர் பலி – 2,386 புதிய தொற்றாளர்

462 Views

இலங்கையில் நேற்று 20 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திழணைக்களம் நேற்றிரவு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இலங்கையில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 386 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 22 ஆயிரத்து 330 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply