கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலம்- களனி ஆற்றிலிருந்து மீட்பு

259 Views

சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் இருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

நாவகமுவ பகுதியில் சிதைந்த உடல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் கைகள் இரண்டும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 23 ஆம் திகதி  ஹன்வெல பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply