கூட்டமைப்பை பேச்சுக்கு அழைக்கும் கோட்டா? ஐரோப்பிய ஒன்றியத்தை சமாளிக்க உபாயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ திட்டமிட்டிருப்பதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. பெரும்பாலும் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் இலங்கை தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜஎஸ்பி பிளஸ் சலுகை இழக்கப்பட்டால் கடுமையான நெருக்கயை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தயாராகிவருவதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தப் பேச்சுக்கள் இடம்பெறலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Leave a Reply