கூட்டமைப்புத் தலைமையுடனான பேச்சுக்களை இறுதிவேளை ரத்துச் செய்தார் கோட்டாபய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை மாலை நடைபெறவிருந்த நேரடிப் பேச்சு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தப் பேச்சுப்பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்து இந்தப் பேச்சுக்களை இப்போதைக்கு தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கிறார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரி வித்தன.

புதிய பேச்சுத் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டமைப்புக்கு இன்று மாலை தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply