குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் வாக்குமூலம்

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுபவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.