குற்றப்புலனாய்வுத் துறையின் 700 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டம்

498 Views

புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, உயர் பதவிகளில் இருந்த சிலர் நாட்டை விட்டுத் தப்பியேடியுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகள் உச்சக்கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் 700 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என தகவல் கிடைத்துள்ளதால், கொழும்பு விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக 700 பேரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை கொழும்பு விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Leave a Reply