குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் பெண்கள் வினோத போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் பெண்கள், மாணவர்கள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் சென்னையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சென்னை பெசன் நகரில் தெருக்களில் மற்றும் சாலைகளில் பெண்கள்  No to NRC. Vo to CAA  என்ற வாசகங்களுடன் கோலமிட்டனர். இதனைத்  தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 7 பெண்கள் பொலிசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

india protest 2 குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் பெண்கள் வினோத போராட்டம்இந்தச் சம்பவத்திற்கு அரசியல் சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும்  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply