கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண

கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, மாகாண ஆளுநர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு, மற்றும் தென் மாகாணம் தவிர்ந்த ஆளுநர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவியேற்கவுள்ளதாக அறியப்படுகின்றது.

கோத்தபயா ராஜபக்ஸவின் அழைப்பிற்கு இணங்கவே தாம் இந்தப் பதவியை ஏற்கவுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வாரமே தனக்கான பதவியை ஏற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண,  லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர். அரசியலில் நன்கு அனுபவம் உள்ளவர். இறுதியாக 2010ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்.