கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை ஆய்வு – பிரான்ஸ், நோர்வே நிறுவனங்களுக்கு அனுமதி

சிறீலங்காவில் தமிழர் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் மற்றும் நோர்வே நிறுவனங்களுக்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நேற்று (27) கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் நாட்டின் டோட்டல் மற்றும் நோர்வே நாட்டின் ஈகுய்னோர் ஆகிய நி-றுவங்களுடனேயே இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது இரண்டு வருட உடன்படிக்கை எனவும் சிறீலங்காவின் எரிபொருள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டோட்டல் நிறுவனம் ஏற்கனவே 50,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், நோர்வே நிறுவனம் புதிதாக இணைந்துள்ளதாகவும் அது 30 விகிதமான பங்குகளைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பெல் ஜியோஸ்பேஸ் நிறுவனம் மன்னர் கடற்பகுதியில் காந்த மற்றும் புவியீர்ப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.