கிளிநொச்சி – அக்கராயன் சந்தியில் அமைந்துள்ள அக்கிராசன் மன்னனின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், அக்கரையான் மன்னனுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.