காவலரணில் நின்ற படையினரைத் தாக்கிய இரு இளைஞர்கள்; கைதாகி பொலிஸில் ஒப்படைப்பு

359 Views

உரும்பிராய் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் ஓட்டோவில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply