தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் (04) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி,மேலதிக அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரச அதிபர் எஸ்.சுதாகரன்(காணி), வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் ,கால் நடை வைத்திய அதிகாரி என பலர் கலந்து கொண்டனர். இதன் போது கால் நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் தங்களது கோரிக்கைகளை கால் நடை வளர்ப்பாளர்கள் மாவட்ட செயலாளரிடம் முன்வைத்தனர்.
இதன் போது தம்பலகாமம் பகுதியில் 03.12.2023 ந் திகதி அன்று முதலை தாக்குதளுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மாவட்ட செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம் பகுதியை சேர்ந்த பண்ணையாளர்களின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.