காலநிலை மாற்ற மாநாட்டில் உலகத்தலைவர்களை எச்சரித்த 16  வயது கிரேற்றா தண்பேக்(காணொளி இணைப்பு)

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயதுடைய கிரேற்றா தண்பேக் பூகோள காலநிலை மாற்ற அபாயத்தை தடுக்கும் ஆர்வலராக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உலகெங்கும் சென்று பரப்புரை செய்து வருகின்றார்.

தற்போது மற்றிட்டில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 25வது காலநிலை மாற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் பல ஆதாரங்களோடு உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் சவால் விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு  ‘கிட்டத்தட்ட எதுவும் செய்யப்படவில்லை’ என கிரேற்றா தண்பேக் கண்டனம் வெளியிட்டார்.

உலகத் தலைவர்கள் வாக்குறுதிகளோடு மட்டும் நின்று விடாமல் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி உள்ளார். பூகோள வெப்பநிலை அதிகரித்துக் கொண்டு செல்வதால் தாமதிப்பதற்கு அவகாசம் இல்லையென்றும் பூகோள வெப்பநிலை 1.5 பாகையால் அதிகரிக்கும் என்று அறியப்பட்டுள்ள போதிலும் 1 பாகை வெப்பநிலை அதிகரித்தாலே உலக அளவில் பெரும் அழிவு ஏற்படுமென்றும் கூறியுள்ளார்.

அவர் தனது உரையில் பூகோள வெப்பநிலை உயர்வை உறுதிப்படுத்த பல ஆதாரங்களை கூறியதோடு உலகத் தலைவர்கள் எவ்விதம் இவற்றை அறிந்தும் பதட்டமடையாமல் இருக்க முடியுமென்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

08d80eb16d0cfc5ee3a911d185dadca86decec550b321fb4b7933764bf06fc2d காலநிலை மாற்ற மாநாட்டில் உலகத்தலைவர்களை எச்சரித்த 16  வயது கிரேற்றா தண்பேக்(காணொளி இணைப்பு)