காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

557 Views

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கில் இடம்பெற்ற மோதலின் பொது காணாமல்போனவர்கள் மற்றும் மோதல்களின் போது காணாமல் போன படையினரின் விபரங்களையே காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்களை காணாமல்போனோரின் உறவினர்கள் மீளாய்வு செய்வதுடன்,  ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை அறிவிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply