யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு ஒரு கை அகற்றிய அவலம் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருக்கு ஊசி மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட cannula வினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்த்தோடு முதல் கட்ட உரிய நடவடிக்கைகள் அனைத்தும. மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தில் cannula செலுத்திய போது அல்லது மருந்து செலுத்தும் போது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் கையின் கீழ் பகுதிக்கு இரத்தம் செல்ல முடியாமல், கை செயலிழந்துள்ளது.
இதனால் கையை அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது. அது தொடர்பான பூரண விசாரணை நடந்து கொண்டிருக்கிறது“ என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தைச் சேர்ந்த சிறுமி 25 ஆம் இரவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 26 ஆம் திகதி கனூளா போடப்பட்டுள்ளது. 27 ஆம் திகதி 3 நேர மருத்து ஏற்றப்பட்டுள்ளது. 27 ஆம் திகதி இரவு பிள்ளை முறையிட்டுள்ளதோடு தாயாரும் முறையிட்டுள்ளார். 28 ஆம் திகதி காலை கனூளா களட்டப்பட்டுள்ளது. அப்போதே கை வீக்கம் காணப்பட்டுள்ளது. கையிற்கு குருதி ஓட்டம் இல்லை எனக் கண்டுபிடித்து மாலை சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுத்து சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2 ஆம் திகதி இடது கை மணிக் கட்டுடன் அகற்றும் அவலம் ஏற்பட்டு விட்டது.
காச்சல் காரணமாக திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறிய வைத்தியரின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய போதனா வைத்தியசாலையின் 12ஆம் இலக்க விடுதியில் அனுமதித்துள்ளனர். தனியார் வைத்தியசாலையில் இருந்து பின்பு போதனா வைத்தியசாலையில் பொருத்திய ஊசியின் கையே அகற்றப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நேற்றைய தினம் இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்காக வைத்திய நிபுணர்களா
பிறேமகிருஸ்னா மற்றும் அருள்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய சுகாதார அமைச்சிற்கும் முறையிடப்பட்டுள்ளது.