காசா வான் தாக்குதல்களைக் கண்டிப்போம் இதைப் போல் இலங்கையிலும் நிகழ்ந்தன – மனோ கணேசன்

காசா வான் தாக்குதல்களை கண்டிப்போம் எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், உடல், பொருள், ஆவி இழந்த மக்களுக்காக வருந்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ்  போராளிகளுக்கும், இஸ்ரேலியப் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களால் இரு தரப்பிலும் இறப்புகள், சேதங்கள், துயரங்கள் அதிகரித்துள்ளன. சுமார் 100இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 1000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இது  ஒரு நீண்டகால மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு கிடைத்திட்ட இந்த உலக அவதானம் கிடைக்காமல், இதே மாதிரி வான் தாக்குதல்கள் இலங்கை இறுதிப் போரிலும் நிகழ்ந்தன என்பதை மனதில் கொண்டு, இன்றைய போராயுத உலகில் தமது மக்களை காக்க முடியாத, போராளி அமைப்புகள், கொடுங்கோல் அரசுகளுடன் நேரடியாக மோதுவதை மீளாய்வு செய்ய வேண்டுமா என்பதை பற்றி கலந்து உரையாடுவோம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.