காசாவில் இடம்பெறும் போரில் பொதுமக்களின் இழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அங்கு இடம்பெறும் போரில் இதுவரையில் 10.328 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,237 சிறுவர்கள் மற்றும் 2,719 பெண்கள் ஆவார். மேலும் 26000 பேர் காயமடைந்துள்ளதுடன், 2300 பேர் காணாமல்போயுள்ளனர்.
இதுவரையில் 48 ஊடகவியலாளர்களும், 493 மருத்துவத்துறை ஊழியர்களும் 18 அவசரநிலை பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வான் தாக்குதல்களினால் 70 விகிதமான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதுவரையில் இஸ்ரேல் 30,000 தொன் வெடிமருந்துகளை பயன்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சதுர.கி.மீற்றரக்கு 82 தொன் வெடிமருந்துகள். 50 விகிதமான வைத்திசாலைகளும் 62 விகிதமான சுகாதார நிலையங்களும் சேதமடைந்த நிலையில் மூடப்பட்டுள்ளன.
ஏறத்தாள 220,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 10 விகிதமானவை மனிதர்கள் மீண்டும் வாழமுடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 40,000 வீடுகளும், 88 அரச திணைக்கண கட்டிடங்களும் முற்றாக அழிந்துள்ளன. 60 பாடசாலைகள் முற்றாக அழிவடைந்ததுடன், 222 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. மாணவர்களின் கல்வி முற்றாக தடைப்பட்டுள்ளது. 56 மசூதிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 192 மசூதிகளும், 3 தேவலையங்களும் சேதமடைந்துள்ளன.