காசாவுக்கு மானிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா பாதுகாப்புச்சபை இணக்கம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அனுமதிக்கும் தீர்மானத்திற்கு 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

12 நாடுகள் ஆதரவாக வாக்களித்த போதும், நிரந்தர உறுப்புரிமை கொண்ட வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் எவையும் அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அமெரிக்காவிவும், பிரித்தானியாவும் வாக்கொடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்காக நிபந்தனை என்ற தீர்மானத்தின் சொல்லை உதவிகள் சென்றடைவதை கோருகின்றோம் என மென்மையாக மாற்றியதுடன், நிபந்தனைகள் இன்றி ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சேர்க்கப்பட்ட பின்னரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மால்ட்டா இந்த தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

இது எமக்கு கிடைத்த சந்தர்ப்பம், இதனை பயன்படுத்தி நாம் பொதுமக்களின் உயிரிழப்புக்களை தடுப்பதுடன், சிறுவர்களையும் களமுனைகளில் இருந்து பாதுகாக்க முன்வரவேண்டும் என மால்ட்டாவின் ஐ.நாவுக்கான பிரதிநிதி வனீசா பிறேசியர் தெரிவித்துள்ளார்.