காசாவில் இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்

244 Views

காசாவில்  இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடங்கள் தரப்பில், “காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது.

திங்கட்கிழமை முதலே இஸ்ரேல் இராணுவம் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 42 பேர் பலியாகினர்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மோதலில் பாலத்தீனர்கள் 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 100 பேர் பெண்கள் மற்றும் சிறார்கள். இதேபோல, 150 போராளிகள்வரை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

இந்த தாக்குதலில் சாதாரண மக்களை இலக்கு வைப்பது தங்களுடைய நோக்கம் அல்ல என்று கூறும் இஸ்ரேல், ஹமாஸ் போராளிகள் மட்டுமே தங்களின் இலக்கு என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

Leave a Reply