காசாவில் இடம்பெற்ற மோதல்களில் 11 இஸ்ரேலிய படையினர் பலி

இஸ்ரேலின் ஜுனின் பள்ளத்தாக்கில் உள்ள அல் மரி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் காலாட் படையினர் மீது ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொண்டதாக கிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் மேக்காவா 4 மற்றம் 3 ரக டாங்கிகள் அழிக்கப்பட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலின் தரைப்படையினருடன் சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், அல் ஜசின் 105 ரக ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் 3 வாகனங்கள் அழிக்கப்பட்டதாக அல் குசாம் பற்றலியன் தெரிவித்துள்ளது. அதேசமயம் நேற்று (31) இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அஸ்டோட் பகுதிகளில் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த காணொளிகள் வெளியாகியுள்ளன. எனினும் சேதவிபரங்கள் தெரியவரவில்லை.

அதேசயம், சிரியாவில் உள்ள அல் ஊமார் அமெரிக்க தளம் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 19 ஆம் நாளுக்கு பின்னர் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது 25 இற்கு மேற்பட்ட தாக்குதல்கள் இடமபெற்றுள்ளன.