காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை: ஈழத் தமிழர்களை தேடும் கேரள காவல்துறை

427 Views

படகு வழியாக வெளிநாட்டுக்கு செல்லும் ஈழத் தமிழர்களின் முயற்சியினைத் தடுக்க காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான   கடலோர  காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

இந்த சூழலில், கொச்சி கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் இருந்த படகை சோதனையிட்ட கேரள காவல்துறை, ஆவணங்கள் சரியாக சமர்பிக்கப்பட்டதை அடுத்து   படகினை விடுவித்திருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூசிலாந்து நாட்டை நோக்கி 243 பேருடன் சென்ற படகு காணாமல் போனது.

இதில் சென்றவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் எனக் கூறப்படும் நிலையில், அவர்கள் என்னவாகினர் என்பது இன்னும் கண்டறியப்படாமலே உள்ளது. இவ்வாறான சூழலில் கேரளாவிலிருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply