காங்கோவில்  முக்கிய அதிபர் வேட்பாளர் தேர்தல் நாள் அன்று மரணம் – சோகத்தில் ஆதரவாளர்கள்

718 Views

காங்கோவில் முக்கிய அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் 1979-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வரும் சசவ் நுகுசோவை எதிர்த்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ்.

61 வயதான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ மனையில்   இருந்தபடி காணொளி  ஒன்றை வெளியிட்ட அவர் தான் சாவுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும், இருப்பினும் மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் நாளான நேற்று முன்தினம் மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply