கனடாவில் சீக்கிய குழுவின் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய புலனாய்வுத்துறையின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் மேற்கொண்ட குற்றச்சட்டை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் எழுந்த இரஜதந்திர நெருக்கடிகளை தொடர்ந்து இந்தியாவினால் நிறுத்தப்பட்ட நுளைவு அனுமதி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள தமது இரஜதந்திர பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதால் தாம் அதனை நிறுத்தியிருந்தோம். தற்போது பாதுகாப்பு நிலமையை ஆய்வு செய்த பின்னர் பகுதியாக இந்த சேவையை ஆரம்பித்துள்ளது இந்தியா. 14 வகையான நுளைவு அனுமதிகளில் 4 வகையான நுளைவு அனுமதிகளே வழங்கப்படுகின்றன. மருத்துவம்இ மநாடு மற்றும் வர்த்தக தேவைகளுக்காக செல்பவர்களுக்கே நுளைவு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை (26) இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பினரே இந்த கொலையில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய அரசுக்கு தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து கனடாவில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு அதிகாரியை கனடா வெளியேற்றியிருந்தது. இந்தியாவும் கனடா இரஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தது. கடந்த வாரம் மேலும் 20 இரஜதந்திரிகளை கனடா மீள அழைத்திருந்தது.