திருகோணமலை மாவட்டம்,கந்தளாய் வலயக் கல்வி பிரிவில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தி/கந்/ரஜ எல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 60 மாணவர்களுக்கு ரூபாய் 7500 பெறுமதியான பாடசாலை உபகரணப் பொதிகள் முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நேற்று (18) வழங்கி வைக்கப்பட்டது .கல்வியை மேம்படுத்தவும் வறுமை நிலை மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காகவும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எம்.எம்.எம்.முனீர்,திட்ட இணைப்பாளர் வஹீ,றமீஸ் தொழில் நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்