சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுதிறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் ,தம்பலகாமம் ,கிண்ணியா, பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுதிறனாளிகளை வேலை வாய்ப்புக்கு உட்சேர்த்தலில் சிறந்த திட்டமாக தெரிவு செய்யப்பட்டு கிண்ணியா மூதூர் ,தம்பலகாமம், பட்டிணமும் சூழலும் பிரிவுகளுக்கு உரிய மாற்றுதிறனாளிகள் தொழில் தருனர்கள் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று (19)நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் திருமதி யமுனா பெரேரா திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி ,சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனோஜா ஹேரத்,உதவி பணிப்பாளர் ,JICA திட்டத்தின் உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட மனித வள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்