கடுமையான அழுத்தத்தில் ரணில் – ஊடகவியலாளர் மீது பாச்சல்

அண்மையில் ஜேர்மனி சென்றிருந்த இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை டி.டபிள்யூ என்ற ஊடகத்தின் சார்பில் நேர்காணல் கண்ட ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பொறுப்பற்ற முறையில் பதிலழித்ததுடன், ஊடகவியலாளர் மீது கோபத்துடன் ரணில் கடும் சொற்களை பிரயோகித்தது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துலக விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு ரணில் அளித்த பதில்கள் வருமாறு:

இலங்கை எந்தவொரு சர்வதேசிய விசாரணைக்கும் இடந்தராது. அதற்கு முற்றுப்புள்ளி.  பிரிட்டனில், ஜேர்மனியில் எதற்காவது சர்வதேசிய விசாரணை நடந்ததா?

அப்பாவி இலங்கையர், ஆசியர்கள், நாம் இரண்டாம் தரமானவர்களா?

என்னை குற்றம் சாட்ட வராதீர்கள். உங்கள் பேச்சு “நொன்சன்ஸ்”.

இந்த “விளையாட்டில்”  நான் உமக்கு முன்னமேயே இருக்கிறேன். நான் “தொலைக்காட்சி”,  “ஊடகம்” இரண்டையும் நடத்தியுள்ளேன்.

மேற்குலக “ஊடகங்கள்” சிறிலங்காவை கெட்டதாக பார்க்கிறது. “கார்டின”லிடம் இருந்து ஒரு காகிதத்தை வாங்கி வந்து இங்கே வாசிக்கிறீர்கள்.

உங்கள் மேற்குலக மனப்பான்மையை அகற்றுங்கள்.  நாம் மனித உரிமையை மீறுவதாக நீங்கள் இங்கே வந்து சத்தமிடுகிறீர்கள். நாங்கள் மீறவில்லை.

இருந்தபோதும் ஊடகவியலாளர் இறுதியாக இலங்கை அரசு நீதி, பொறுப்புக்கூறல், ஆகியவற்றை இன்னும் மக்களுக்கு வழங்கவில்லை என, இன்று உங்கள் நாடு எதிர்பார்த்து தங்கி இருக்கும், உலகம் நினைக்கிறது. ஆகவே உங்கள் இந்த மனப்பான்மை, நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளை பாதிக்காதா? என கேட்டத்திற்கு

நான் சர்வதேச சமூகத்துடன் வேலை செய்கிறேன். என் வெளிநாட்டு அமைச்சர் நிரந்தரமாக தொடர்பில் இருக்கிறார். அவர்களுக்கு இது தெரியும். உங்கள் கேள்விகள் வீண் என ரணில் பதிலழித்துள்ளார்.