கடந்த வருடம் மட்டும் 3 இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்-பேராசிரியர் சூவ் ஹாங்க்

இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் 300,000 க்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் சூவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவை அவர் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள், வைத்தியர்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையற்ற மாற்று விகிதங்கள் அல்லது பரிமாற்ற நெருக்கடி இந்த நிலைமையை பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையை போக்க 1884 மற்றும் 1950 க்கு இடையில் இருந்த பரிமாற்ற வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் மேலும் கூறியுள்ளார்.