ஓமந்தையில் இன்றிரவு நிகழ்ந்த அனர்த்தம் – பறிபோன உயிர்

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இரவு 7.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்று (06.01) இரவு 7.30 மணியளவில் ஓமந்தை கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் பணியாற்றுகின்ற 41 வயதுடைய மதுரசிங்க என்ற இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
0 02 06 e93a86955c320e5a3808d3934f0a947bf38b708e3b254ba60a50932d26ec3c4a d00e98c4 ஓமந்தையில் இன்றிரவு நிகழ்ந்த அனர்த்தம் - பறிபோன உயிர்
வைத்திய பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply