ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும்  இடையே இடம்பெற்றுவரும் மோதலானது  கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி  தீவிரம் அடைந்தது.

இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் அண்மையில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில்  இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனை வெகுஜன படுகொலை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சபை இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.