ஒரே ஏவூர்தியில் 143 செயற்கைக் கோள்கள் ஏவி உலக சாதனை  படைத்த அமெரிக்க நிறுவனம்

ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய இந்தியாவின் உலக சாதனையை அமெரிக்கா முடியடித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவூர்தி மூலம் 2017ம் ஆண்டு 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக சாதனை  படைத்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள்   வெற்றிகரமாக விண்ணில்  அனுப்பியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் உலக சாதனையை  அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது.

Leave a Reply