ஒரே இரவில் 100 விமானங்கள் மூலம் தாக்குதல்

காசாவில் வெள்ளிக்கிழமை (27) இரவு மற்றும் சனிக்கிழமைகளில(28); 100 இற்கு மேற்பட்ட எப்-16, எப்-15 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. தரைத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளபோதும், அவர்கள் ஸ்ராட் பட்டனை அழுத்திவிட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இணையத்தள தொலைதொடர்புகள் அனைத்தும் காசா பகுதியில் இஸ்ரேலினால் நிறுத்தப்பட்டுள்ளதால் வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் காசா பகுதியில் உள்ள மனிதாபிமான அமைப்புக்களுக்கு ஸ்ரார்லிங் என்ற இணையத்தள சாதனத்தை ருவிற்றர் மற்றும் ரெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலோன் முஸ்க் வழங்கியுள்ளார்.