ஒரு மாதத்திற்குள் 500 பில்லியன் டொலர்களால் உயர்ந்த அமெரிக்காவின் கடன் தொகை

கடந்த 20 நாட்களுக்குள் அமெரிக்காவின் தேசிய கடன்தொகை 500 பில்லியன்களால் உயர்ந்துள்ளதுடன்இ அதன் மொத்த கடன்தொகை 33.5 றில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் திறைசேரி கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

இது அமெரிக்காவின் கடன் பெறும் எல்லையான 31.4 றில்லியன் டொலர்களை கடந்துள்ளது. நாட்டை நிர்வகிப்பதற்கு அமெரிக்கா வாங்கிய கடன்கள் கடந்த மாதம் 18 ஆம் நாளின்போது 33.04 றில்லியன் டொலர்களாக உயர்ந்திருந்தது.

32 றில்லியன் டொலர்களில் இருந்து 33.04 றில்லியன் டொலர்களாக கடந்த 3 மாதங்களில் அது உயர்ந்திருந்தது. ஆனால் அது தற்போது 33.5 றில்லியனாக 20 நாட்களில் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கடன் பெறும் எல்லையான 31.4 றில்லியன் டொலர்களை அது கடந்த ஜனவரி மாதமே கடந்திருந்தது. அமெரிக்காவின் மொத்த பொருளாதாரம் 25.46 றில்லியன் டொலர்களாகும். அதாவது இந்த கடன் தொகையை எட்டவேனுமெனில் பொருளாதாரம் 33.5 விகிதம் வளரவேண்டும்.

அமெரிக்காவின் இந்த நிலை உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.