ஐ.நாவை வெளியேறுமாறு ஆபிரிக்க நாடு உத்தரவு

நைகர் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டள்ளது.

நைகருக்கான ஐ.நா பிரதிநிதி லூயிஸ் ஆர்பின் தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும்இ நைகர் நாடு தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் தவறான தகவல்களை பரப்புவதாகவும் நைகர் அரசு கடந்த செவ்வாய்கிழமை (10) தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொச்சபை அமர்வில் நைகர் நாடு கலந்துகொள்வதை அவர் தடுத்துள்ளார். பிரான்ஸின் அழுத்தங்கள் காரணமாக அவர் இதனை மேற்கொண்டுள்ளார். வியன்னாவில் கடந்த மாதம் இடம்பெற்ற அனைத்துலக அணுசக்தி மாநாட்டில் நைகர் கலந்துகொள்வதையும், சவுதி அரேபியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதையும் அவர் தடுத்துள்ளார். இவரின் நடவடிக்கைகள் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை எற்படுத்தியள்ளன என நைகரின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் இராணுவப்புரட்சி மூலம் அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தது. ஆட்சியை கைப்பற்றிய புதிய அரசு பிரான்ஸ் படையினரை அங்கிருந்து வெளியேற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.